கோச்சடையான் படப்பிடிப்பு மார்ச் 15-ல் ஆரம்பம்!!!

Saturday, March 10, 2012
கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு வரும் 15-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

ரஜினி நடிக்கும் 'கோச்சாடையான்' பட வேலைகளில் மும்முரமாக உள்ளது படக்குழு.

சமீபத்தில் இந்தப் படத்துக்கு வீட்டிலேயே பூஜை போடப்பட்டு, ரஜினியை மேக்கப் சேரில் அமர வைத்து விதவிதமாக படங்கள் எடுத்தனர். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தப் பட்டது.

வருகிற 15-ந்தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர். அன்றைய தினம் ரஜினியும் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேயும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

பின்னர் படக் குழுவினர் லண்டன் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு மூன்று வாரம் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்துகிறார்கள். ஹாலிவுட் ஸ்டண்ட் நிபுணர்களை வைத்து ரஜினியின் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.

இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர். கிராபிக்ஸ் மூலம் நாகேசின் நகைச்சுவை காட்சிகளும் படமாவதாகக் கூறப்படுகிறது.

3 டி அனிமேஷனில், Performance capturing உத்தியில் தயாராகும் இப்படத்தில், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, ருக்மணி, நாசர் உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். சௌந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த ஆண்டிலேயே படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

Comments