
சென்னை::நடிகை குஷ்பு பெண்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து நைரோபியில் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து நைரோபி செல்கிறார்.
ஐ.நா. சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கென்யா தலைநகர் நைரோபியில் கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16,17 ஆகிய 2 தேதிகளில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கூட்டத்தில் இளைஞர்கள் நலன் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசுகிறார். அதற்கான உரையையும் அவர் தயார் செய்துள்ளார். அவர் தனது உரையில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நைரோபி செல்கிறார்.
Comments
Post a Comment