பேஷன் ஷோவில் 10 நிமிடம் பங்கேற்க கேத்ரினாவுக்கு ரூ 1 கோடி சம்பளம்!!!

Tuesday, March 06, 2012
பேஷன் ஷோ மேடையில் 10 நிமிடம் தோன்றுவதற்காக ரூ.1 கோடி சம்பளம் பெறுகிறார் கேத்ரினா கைப். பிரபல பாலிவுட் ஹீரோயின்கள் படங்களில் நடிக்க பல கோடி சம்பளம் பெறுகின்றனர். இதற்கிடையில் விளம்பரம், பொது இடங்களில் தோன்றுவதற்காகவும் கோடிகளில் சம்பளம் கேட்கின்றனர். வரும் 25ம் தேதி கேரளாவில் நடக்கவுள்ள பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கேத்ரினாவை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மேடையில் நடந்து வர விழா குழுவினர் கேட்டனர். 10 நிமிடம் மட்டுமே மேடையில் தோன்றுவதற்கு ரூ.1 கோடி சம்பளம் தரவேண்டும் என கேட்டுள்ளார் கேத்ரினா. அதற்கு போட்டி நடத்துபவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தென்னிந்திய நடிகைகளை பொறுத்தவரை பொது இடங்களில் தோன்ற குறைந்த சம்பளமே கேட்கின்றனர். அசின், ஸ்ரேயா, த்ரிஷா போன்றவர்கள் இதற்காக ரூ.30 லட்சம்வரை கேட்கிறார்களாம். சமீபத்தில் சூர்யா, மாதவன், ஆர்யா போன்றவர்களும் இதுபோன்ற நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுள்ளனர்.

Comments