Saturday, February 25, 2012
ரசிகர்களின் சில்மிஷத்தில் இருந்து தப்பிக்க, கோலிவுட் ஹீரோயின்கள் தனியார் செக்யூரிட்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்வது பேஷன் ஆகி வருகிறது.பெரும்பாலான ஹீரோக் கள் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் சிக்கும்போது தப்பி வெளியேறிவிடுகின்றனர். ஹீரோயின்களால் அது சாத்தியமில்லை. பொது நிகழ்ச்சிக்கு வரும் ஹீரோயின்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவதுபோல் நெருங்கி இடுப்பை கிள்ளுவது, கைகுலுக்குவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் தெலுங்கு பட ஷூட்டிங்கின்போது ஸ்ரேயாவின் இடுப்பை ஒரு ரசிகர் கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதேபோல் கோவையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற ஹன்சிகாவை ரசிகர்கள் சூழந்துகொண்டனர். அவரை போலீசார் மீட்டனர். இதுபோன்ற இக்கட்டான வேளையில் தங்களை காத்துக்கொள்ள ஹீரோயின்கள் தனியார் செக்யூரிட்டிகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது நமீதா, செக்யூரிட்டி வளையத்துக்குள் நடந்தபடி வருவார். அவரை ரசிகர்கள் நெருங்கவோ, சில்மிஷம் செய்யவோ முடியாது. இதுபற்றி நமீதா கூறும்போது,‘‘பொது இடங்களில் ரசிகர்களின் சில்மிஷத்தில் இருந்து தற்காத்து கொள்ள தனியார் செக்யூரிட்டிகள் அவசிய தேவையாகிறது. இதற்காக ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுவொன்றும் பெரிய கட்டணமில்லை’’ என்றார். ஹன்சிகாவிடம் கேட்டபோது,‘‘ரசிகர்கள் என்றால் பிரியமான ஹீரோயின்களை நெருக்கத்தில் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதில் தப்பில்லை. அதிலிருந்து மீள்வதற்கு போலீசை நாடலாம். தனியார் செக்யூரிட்டி வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நம்முடைய ரகசியங்களை வெளியிடுபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள்’’ என்றார்.

Comments