
தேசிய விருது வென்ற இயக்குனர் 'வெற்றிமாறன்' அடுத்து சிம்புவை வைத்து இயக்கும் படம் 'வடசென்னை'. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார். 'வடசென்னை' படத்திலிருந்து ராணா விலகியதற்கு நடிகை த்ரிஷா தான் காரணம் என்று தற்போது கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. ராணாவும், த்ரிஷாவும் நண்பர்கள். சிம்பு நடிக்கிற படத்தில் சின்ன வேடத்தில் நடிப்பதா என்று த்ரிஷாதான் தனது நண்பர் ராணாவை கேட்டதாக கோலிவுட் பக்கம் கிசுகிசு எழுந்துள்ளது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் தான் வாய் திறக்க வேண்டும்.
Comments
Post a Comment