ஷாருக்குடன் நெருக்கம்: பிரியங்காவை ஒதுக்கும் பாலிவுட்?!!!

ஷாருக்கானுடன் 'ஓவர்' நெருக்கமாக இருப்பதால் இயக்குனர் கரண் ஜோஹார் தனது படத்தில் பிரியங்காவைப் போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

நடிகை பிரியங்கா சோப்ராவும் ஷாஹித் கபூரும் அவ்வப்போது சேர்வதும் பிரிவதுமாக இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் மீண்டும் பிரிந்தபோது பிரியங்கா ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக உள்ள ஷாருக்கானைப் பிடித்துக் கொண்டார். ஷாருக் பிரியங்காவுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும் கூறப்படுகின்றது.

வீட்டில் மனைவி கௌரி கேட்டால் ஷூட்டிங் போனேன், அங்கே போனேன், இங்கே போனேன் என்று டபாய்க்கிறாராம். இதனால் கௌரி பிரியங்கா மீது காட்டமாக உள்ளார். இந்நிலையில் ஷாருக்குடன் ஒட்டி உறவாடும் பிரியங்காவை பாலிவுட் நடிகர்களின் மனைவிமார்கள் ஒதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர். ஹிரித்திக் ரோஷனின் மனைவி ஏற்கனவே பிரியங்காவை விட்டு விலகி விட்டார். அதேபோல மேலும் பலரும் விலகி வருகின்றனர். அவர்கள் கௌரிக்கு ஆதரவு தெரிவித்து அவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ரித்திக் ரோஷன் மனைவி எப்படி பிரியங்காவை ஒதுக்கியுள்ளாரோ அதே போன்று கௌரிக்கும், ஷாருக்கானுக்கும் நல்ல நண்பரான இயக்குனர் கரண் ஜோஹாரும் சோப்ராவை தனது படங்களில் நடிக்க வைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.

இதற்கிடையே கரண் ஜோஹாரின் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக பிரியங்கா விளம்பரப்படுத்தி வருகிறார் என்று ஒரு முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதை கரண் மறுத்துள்ளார்.

கௌரி கோபித்தால் எனக்கென்ன என்று இருந்த பிரியங்கா, பாலிவுட்டே ஒட்டுமொத்தமாக கோபித்துக் கொள்ளும் என்பதை எதிர்பார்க்கவில்லை போலும்...!

Comments