தமன்னா கால்ஷீட் குழப்பம் காரணமாக தயாரிப்பாளர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தயாரிப்பாளர்கள் மீது பாய்ந்திருக்கிறார் தமன்னாவின் தந்தை. தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவுக்கு திடீரென்று சரிவு ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு எதிர்பார்த்தபடி படங்கள் தேடி வந்தன. இந்நிலையில் கால்ஷீட் கொடுத்தபடி ஷூட்டிங் வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ‘ரச்சா’ உள்ளிட்ட 2 படங்களின் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது. இதையடுத்து புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுக்கமாறு தமன்னாவிடம் தயாரிப்பாளர்கள் கூறினர். அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் திடீரென்று மகேஷ்பாபு படமொன்றில் நடிக்க தமன்னா ஒப்புக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் புகார் கூறியதுடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தயாரிப்பாளர்களுக்கு தமன்னா தந்தை மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,‘‘மகேஷ்பாபு படத்தில் நடிக்க தமன்னா ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு தயாரிப்பாளர் கொடுத்த கால்ஷீட்டை விட கூடுதல் நாட்கள் கேட்கிறார். இதற்கு மற்றொரு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இது தயாரிப்பாளர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைதான். அவர்கள்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தமன்னா புதிய படங்களில் நடிக்க எந்த பிரச்னையும் கிடையாது. இதுவரை அவர் ஒப்புக்கொண்டு நடித்த எந்த படத்திலும் ஒப்பந்தத்தை மீறியது கிடையாது’’ என்றார்.
Comments
Post a Comment