போலீஸ் பாதுகாப்புடன் பூர்ணா பட ஷூட்டிங்!!!

Sunday, February 12, 2012
போலீஸ் பாதுகாப்புடன் பூர்ணா பட ஷூட்டிங் நடந்தது. வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூர்ணா. இவர் நடிக்கும் புதியபடம் ‘கருவாச்சி.’ இப்பட ஷூட்டிங் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது என்றார் இயக்குனர்
கருவாச்சி’ பட இயக்குனர் ஏ.ஆர்.சிவா கூறியதாவது:
ஜாதி, பணம், ஈகோ என காதலுக்கு பல தடைகளை மையமாக வைத்து கதைகள் வந்திருக்கிறது. காதலுக்கு தடையாக காமம் இருக்கிறது என்பதுதான் இப்பட கரு. காமம் வென்றதா? காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ். இதை கேட்கும்போது விரசமான படமோ என எண்ணத்தோன்றும். ஆனால் இது முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகிறது. அகில் ஹீரோ. பூர்ணா ஹீரோயின். அஜெயன் வில்லன்.
இப்படத்தின் கதையை ரம்ஜான் மாதத்தில் பூர்ணாவிடம் சொன்னேன். நோன்பு முடித்துவிட்டு இரவு 10.30க்கு கதை கேட்க தொடங்கியவர் அதிகாலை 3 மணிவரை கேட்டார். உடனே நடிக்க ஒப்புதல் தந்தார். சேலம் பின்னணியில் கதை நடக்கிறது. சமீபத்தில் அங்குள்ள கண்ணன்குறிச்சி பஸ்நிலையம் அருகே ஷூட்டிங் நடந்தபோது 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூடி விட்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம். அவர்கள் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடந்தது. ஜெயஸ்ரீ தயாரிப்பு. ஜோஸ்வா ஸ்ரீதர் இசை.

Comments