Tuesday, February 14, 2012
புதிய படங்களை த்ரிஷா ஒப்புக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டு பிஸியாக நடித்து வந்த த்ரிஷா சமீபகாலமாக புதிய படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டிருக்கிறார். நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது யார் என்ற போட்டியில் தான் இல்லை என்றும், பிடித்த ஸ்கிரிப்ட் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார். தெலுங்கில் அவர் நடித்து ‘பாடிகார்ட்’ சமீபத்தில் வெளியானது. ஜூனியர் என்.டி.ஆருடன் ‘தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து அவருக்கு புதுபடங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் எதையும் ஏற்கா மல் மவுனம் காக்கிறார். அதேநேரம் போட்டி நடிகைகள் அனுஷ்கா, காஜல் அகர்வால் கைநிறைய படங்களை ஏற்றுக்கொண்டு நடித்து வருகின்றனர். த்ரிஷாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்திருக்கின்றனர். இதுபற்றி அவரது குடும்பத்தினர் கூறும்போது, ‘‘த்ரிஷாவுக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் நடக்கும்’’ என்றனர். தெலுங்கு நடிகர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அவரது தரப்பு மறுத்திருந்தது. சமீபத்தில் தெலுங்கு நடிகர் ரானாவுடன் நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு வந்தது. அதில் நடிப்பதுபற்றி இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறார்.

Comments
Post a Comment