விஜய் நடிக்கும், 'துப்பாக்கி' படத்தின் ஷூட்டிங் மும்பை சாலைகளில்!!

Tuesday, February 14, 2012
விஜய் நடிக்கும், 'துப்பாக்கி' படத்தின் ஷூட்டிங் மும்பை சாலைகளில் நடக்க இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு ஏராளமானப் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம், 'துப்பாக்கி'. விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷுட்டிங் மும்பையில் நடந்து வந்தது. பெப்சி பிரச்னை காரணமாக, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இதன் ஷூட்டிங், வரும் 20ம் தேதி முதல் மும்பையில் மீண்டும் தொடங்குகிறது.

மும்பை நகரத்தின் முக்கிய சாலைகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. 'சில நாட்களுக்கு முன்பு மும்பை பிலிம்சிட்டி இருக்கும் கோரேக்கான் மேம்பாலத்தில் சிறப்பு அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். படப்பிடிப்பு நடந்தது தெரிந்து ஏராளமான தமிழர்கள் அங்கு கூடிவிட்டனர். இதனால் மாலை நான்கு மணிக்கே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் ஷூட் செய்தோம். வரும் 20ம் தேதி முதல் மக்கள் கூடும் முக்கிய சாலைகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது' என்று பட யூனிட் தெரிவித்தது. இதற்கிடையே, "துப்பாக்கியின் நீண்ட ஷெட்யூலை முடித்துள்ளோம். சமீபத்தில், பாடல் கம்போஸிங் நடந்தது. சிறப்பான ட்யூன்கள் கிடைத்துள்ளன" என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். கிடைத்துள்ள இடைவெளியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், விவசாயிகள் பற்றிய குறும்படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Comments