நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது!!!

நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது. பாய்ஸ், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ‘வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்தது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், அஜய் தேவ்கான் மற்றும் காஜோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments