சில்க் படங்கள் ரீமேக் ஆகிறது : வாய்ப்பை பிடிக்க நடிகைகள் போட்டி!

Wednesday, February 15, 2012
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் இந்தியில் ஹிட்டானதை தொடர்ந்து அவர் நடித்த பழைய படங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அந்த படங்கள் ரீமேக் ஆக உள்ளதால், அதில் நடிக்க பிரபல நடிகைகள் போட்டி போடுகிறார்கள். புதிய கதைகள் தோல்வியால் பழைய படங்களை ரீமேக் செய்யும் பாணி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில்க்கு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற படம் உருவாகி வெற்றி பெற்றது.

அந்த மோகம் தற்போது மலையாள படவுலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா நடித்த பழைய மலையாள படங்களை தூசி தட்டத் தொடங்கி உள்ளனர். மலையாளத்தில் அவர் நடித்த 'இணையை தேடி' என்ற படம் ரீமேக் ஆகிறது. மேலும் கவர்ச்சி அலையில் ஹிட்டான 'சாட்டைக்காரி', 'நித்ரா' ஆகிய படங்களும் ரீமேக் ஆகிறது.

இந்த படங்கள் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளன. சில்க¢ கதையில் நடித்து அந்த ஒரே படத்தால் வித்யா பாலனின் மவுசு கூடியது. அதனால் ரீமேக் ஆகும் சில்க் படங்களில் நடிக்க நமீதா, லட்சுமி ராய், நிகிதா உள்பட பிரபல நடிகைகள் இடையே போட்டி நிலவுவதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவியுள்ளது.

Comments