



இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது இளையராஜா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் தமிழ் - தெலுங்கு ட்ரெயிலர்கள்.
தமிழில் ஜீவா - சமந்தா, தெலுங்கில் நானி - சமந்தா நடிக்கும் இந்தப் படம், இந்தியிலும் உருவாக்கப்படுகிறது. மூன்று மொழிகளிலுமே இளையராஜா இசையமைக்கிறார்.
படத்தின் முதல் ட்ரெயிலர் தமிழ் - தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தியில் இன்னும் வரவில்லை.
தமிழில் நீதானே என் பொன்வசந்தம் பாடலின் ஆரம்ப வரிகள் பேஸ் கிடாரில் இசையாய் வழிய, மனசு கிறங்கிப் போகிரது. தெலுங்கு ட்ரெய்லரில் கண்மணி அன்போடு பாடலின் இசையைப் போட்டிருக்கிறார்கள்.
காட்சியமைப்பும், அந்த இசையும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்த ஆண்டின் மனதை வருடும் இசையாக, காதலைக்கொண்டாடும் படமாக நீதானே என் பொன்வசந்தம் அமையும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது!
Comments
Post a Comment