
நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.
கோலிவுட் காதல் ஜோடிகள் பிரபுதேவா-நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்த்த நிலையில் அவர்கள் காதல்
வாழ்க்கையில் புயலடித்தது. ஆண்டுக்கணக்கில் ஜோடியாக வலம் வந்தவர்கள் சமீபகாலமாக எங்கும் தலைகாட்டுவதில்லை. மேலும் நடிப்புக்கு
முழுக்கு போட்டுவிட்டார் என்று நயன்தாராவை பற்றி திரையுலகினர் எண்ணியிருந்த நிலையில் திடீரென்று தெலுங்கு படத்தில் நடிக்க
ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழிலும் அஜீத் ஜோடியாக நடிக்க உள்ளார். இதையடுத்து இந்த காதல் ஜோடி பிரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
மனைவி ரமலத்திடம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பின்னும் குழந்தைகளுடன் பிரபுதேவா அன்பாக பழகுவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்று
தெரிகிறது. இதுதவிர மற்றொரு புதுகாரணம் இப்போது கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பணத் தேவை ஏற்பட்டது. அப்போது
நயன்தாரா குறிப்பிட்ட தொகையை அவருக்கு வழங்கினார். அந்த பணத்தை பிரிந்துசென்ற மனைவி ரமலத்தின் ஜீவனாம்சம் தொடர்பான தேவைக்கு
பயன்படுத்திக்கொண்டாராம். பிரச்னையிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே தன்னிடம் வாங்கிய பணத்தை பிரபுதேவா பயன்படுத்திக்கொண்ட
செயல் நயன்தாரா மனதை புண்படுத்திவிட்டதாம். மேலும் தன்னை மணப்பதில் காட்டிய ஆர்வம் பிரபுதேவாவிடம் படிப்படியாக குறைந்ததுடன்
அதைவிட அதிகமாக பாசத்தை குழந்தைகள் மீது காட்டுவதும் நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்று நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment