Tuesday, February 14, 2012
இந்தி திரையுலக நட்சத்திர தம்பதி ஹேமமாலினி தர்மேந்திராவின் மகள் இஷா தியோல். இவரும் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார், தமிழில் ஆயுத எழுத்து படத்தில் நடித்துள்ளார்.இஷா தியோலுக்கும் மும்பை தொழில் அதிபர் பரத்தக்தனிக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து இஷா தியோல் பரத் தக்தனி திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன் மும்பையில் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ரஜினி மகள் ஐஸ்வர்யா மட்டும் கலந்து கொண்டார். மருமகனாக போகும் பரத் தக்தனி ரொம்ப அழகாக இருப்பதாக ஹேமமாலினி புகழ்ந்தார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
இஷா தியோல், பரத்தக்தனி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திருமண தேதி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. இஷா திருமணம் செய்து குடும்பத்தோடு செட்டில் ஆக வேண்டும் என்று விரும்பியதால் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளோம். திருமண தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எனது மருமகன் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இஷா தியோல் கூறும்போது, நிச்சயதார்த்தம் முடிந்ததால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லோரது ஆசீர்வாதத்தாலும் பரத்துக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார்.

Comments
Post a Comment