
எங்க காதலுக்கு முக்கிய காரணமாக இருந்ததே இளையராஜா சார் தான் என்று கூறியுள்ளார் விரைவில், சினேகாவை திருமணம் செய்ய இருக்கும் நடிகர் பிரசன்னா. இதுகுறித்து அவர் கூறியதாவது, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் தான் சினேகாவின் அறிமுகம் கிடைத்தது. இப்படத்தின் சூட்டிங் அமெரிக்காவில் நடந்த போது ஆரம்பத்தில் எனக்கும், சினேகாவுக்கும் ஒத்து போகவில்லை. இரண்டு பேருமே எப்போதும் முறைத்து கொண்டு இருந்தோம். சூட்டிங் இடைவேளையில் நான் ஐ-பாடில் இளையராஜா சார் பாடல்களை நிறைய கேட்பேன். அப்போது தான் சினேகாவும், அவரது அக்காவும் என்னோடு பழக ஆரம்பித்தனர். அவர்களும் இளையராஜா சாரின் பாடல்களை கேட்க ஆரம்பித்தனர். அப்போது முதலே எங்களுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது. எங்கள் காதலுக்கு ஒரு இன்ஸ்பரேஷனாக இருந்ததே இளையராஜா சார் தான். அந்த நாட்களை இப்போதும் நினைக்கும் போது இனிமையாக இருக்கிறது.
தற்போது கல்யாணம் மண்டபம் உள்ளிட்ட விஷயங்கள் வரை பேச்சுவார்த்தை நடக்கிறது. சினேகா இப்போது விடியல், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தபடங்களை எல்லாம் முடிக்க 2-3 மாதம் ஆகும். அதன்பிறகு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
சரி, காதலர் தினத்தில் சினேகாவுக்கு என்ன பரிசு கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டால், அன்றைய தினம் அவருக்கு சூட்டிங் இருப்பதால் இன்றே ஒரு அழகான வாட்ச்சை பரிசாக கொடுக்க போகிறேன் என்கிறார்.
அப்படின்னா சினேகா கையில் எப்போதும் பிரசன்னா தான்...!
Comments
Post a Comment