
ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு 'டைம் பாஸ்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஷெர்லினுக்கு பிறந்தநாள். இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சி ஸ்டில்கள் வெளியிட்டிருக்கிறார். இதில் முழுநிர்வாண போஸும் அடக்கம். பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி கூறும்போது, 'ரசிகர்கள் என்னை நடிகையாக, மாடல் அழகியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசாக இந்த புகைப்படத்தை (நிர்வாண போட்டோ) அவர்களது ரசனைக்காக வெளியிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Comments
Post a Comment