பூக்கடை அல்ல கடல்: மணிரத்னம் அறிவிப்பு!!!

மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படம் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகின. இந்நிலையில், பூக்கடை என்ற தலைப்பு எங்களுடையது என இயக்குனர் சரணிடம் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த டைரக்டர் மணிரத்னம், என் படத்தோட தலைப்பு பூக்கடைன்னு நான் சொல்லவே இல்லை. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்னை? என்று கூறினார்.

இந்நிலையில் தனது அடுத்தபடத்திற்கு கடல் என்று பெயர் வைத்துள்ளதாக மணிரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் கவுதமும், நாயகியாக சமந்தாவும் நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அர்ஜூனும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாகவும் கூறியுள்ளார்.

"கடல்" படம் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்து சொல்லும் படமாகவும், அதில் ஒரு அழகிய காதல் கதையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments