
புதிய படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்கவிருந்த த்ரிஷா விலக்கப்பட்டதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் அகமது.
பாமக தலைவர் ஜி.கே. மணி மகன் தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். இப்படத்திலிருந்து திரிஷாவை திடீரென்று நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
த்ரிஷாவின் முகம், தோற்றம் ஜீவாவை விட முதிர்ச்சியாக இருப்பதால், அவர் நீக்கப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது த்ரிஷாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
அவர் இயக்கநரையும் தயாரிப்பாளரையும் தொடர்பு கொண்டு இந்த செய்தி பற்றிக் கூறி வருந்தினாராம்.
இந்த நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநர் அகமது அளித்துள்ள விளக்கம்:
ஜீவா ஜோடியாக நடிக்க திரிஷாவை அணுகி கதை சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவர் தெலுங்கில் தாமு படத்தில் பிசியாக இருக்கிறார்.
எனவே மே மாதம் படப்பிடிப்பை துவங்க உள்ளோம். திரிஷாவை படத்திலிருந்து நீக்கவில்லை. அவரை நீக்கியதாக வெளியான செய்தி வதந்திதான். என் படத்தில் திரிஷா தான் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். அவர் தான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இன்னும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அந்த பார்மாலிட்டி முடிந்ததும் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்," என்றார்.
Comments
Post a Comment