சக நடிகரை பாராட்டிய திவ்யா பல்டி முதல்நாள் பாசம் மறுநாள் டோஸ்!

Saturday, February 18, 2012
சக நடிகர் யாஷை பாராட்டிய திவ்யா இன்று சரமாரியாக தாக்கினார். பாய்பிரண்டுக்கு பிடிக்காததால் அவர் பல்டி அடித்தாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நடித்த குட்டி ராதிகா கன்னடத்தில் தயாரித்த படம் ‘லக்கி’. இதில் யாஷ், திவ்யா ஜோடி. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு பிறகு தன்னுடன் நடித்த ஹீரோ யாஷைபற்றி ஆஹா, ஒஹோவென்று திவ்யா புகழ்ந்தார். ‘நடிப்புக்காக தன்னை அர்ப்பணம் செய்துகொள்பவர், சாப்பிடுவதைகூட மறந்து நடிப்பவர். அவரைப்போல் ஒரு நடிகரை பார்த்ததில்லை’ என்று டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்திருந்தார். இந்த தகவல் பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து கிசு கிசு கிளம்பியது. ஏற்கனவே தொழில் அதிபர் ரபேல் என்பவருடன் நெருக்கமான நட்புடன் இருக்கிறார் திவ்யா. இதை ரபேலி டம் போட்டுக்கொடுத்து விடுவார்களோ என்று திவ்யா பயப்படுகிறாராம்.

முதல்நாள் யாஷ் மீது காட்டிய பாசத்துக்கு எதிராக மறுநாள் டுவிட்டர் பக்கத்தில் டோஸ் விட ஆரம்பித்திருக்கிறார் திவ்யா. Òதொலைக்காட்சியில் யாஷைபற்றி தனிப்பட்ட முறையில் நான் சொல்லும் கருத்துக்களை ஒளிபரப்பக்கூடாது என்று தடைவிதிக்கிறார். மேலும் பட போஸ்டர்களில் என் பெயர் (திவ்யா) இடம் பெறக்கூடாது என்று தகராறு செய்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் என் பெயரை நீக்குகிறார்கள். படத்திற்கான விளம்பர டிசைனில்கூட என் பெயர் இடம்பெறக்கூடாது என்று டிசைனரிடம் யாஷ் வற்புறுத்தி இருக்கிறார். நான் அவரை பாராட்டியதற்கு எனக்கு நல்ல பலன். அவருக்கு நான் பரிந்து பேசியது முட்டாள்தனமானது என்பதை தெரிந்து கொண்டேன். இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இதற்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பதை அவர் விரைவில் தெரிந்துகொள்வார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சாண்டல்வுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments