சிரஞ்சீவி மகனுக்கு அப்பாவாகும் பார்த்திபன்!!!

Monday, February 20, 2012
நடிகர் பார்த்திபன் தெலுங்கு படமொன்றில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவுக்கு அப்பாவாக நடிக்கிறார்.

நடிகர் பார்த்திபன் நடித்த அம்புலி 3டி படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. அடுத்ததாக அவர் ஆப்பு என்ற படத்தில் நடிக்கிறார். அவர் முதன் முறையாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் அதுவும் ஹீரோவின் அப்பாவாக. தெலுங்கு இயக்குனர் சம்பந்த் நந்தி சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவை வைத்து ரச்சா என்ற படத்தை எடுக்கிறார். இதில் கதாநாயகனுக்கு ஜோடியாக தமண்ணாவும், அப்பாவாக பார்த்திபனும் நடிக்கின்றனர்.

என்ன பார்த்திபன் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறீர்களாமே என்று கேட்டதற்கு, எனது கதாபாத்திரம் சிறியது என்றாலும், முக்கியமான ஒன்று. அதனால் தான் அப்பாவாக நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.

இந்த படத்திற்காக அவர் தெலுங்கு கற்றுவருகிறாராம். தமிழில் நடித்தாகிவிட்டது, தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

Comments