கார்த்திகா ரகசிய திருமணம்?

Tuesday, February 21, 2012
தூத்துக்குடி' படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அதன் பிறகு 'பிறப்பு', 'ராமன் தேடிய சீதை', 'மதுரை சம்பவம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'அலையோடு விளையாடு' உள்பட இன்னும் சில படங்கள் வெளிவர வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து விடவே புதுக்கோட்டை அருகில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக அவரது அம்மா கூறியிருந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் கோயிலில் ரகசியமாக திருமணம் நடந்ததாகவும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டதாகவும், தற்போது அவர் கணவர் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது 'நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது. திருமணம் நடக்கவில்லை' என்றனர். கார்த்திகாவின் உறவினர்கள், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதையோ, அவர் சென்னைக்கு திரும்புவதையோ விரும்பவில்லை என்றும் அதனால்தான் திருமணத்தை ரகசியமாக நடத்தியதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

Comments