உயர்த்துவதாக கூறி சீரழித்தனர்’ சில்க்கை போல் என் வாழ்க்கை கிடையாது : வித்யாபாலன் பேட்டி!!!

Sunday, February 26, 2012
சில்க் ஸ்மிதாவை உயரத்துக்கு கொண்டு செல்வதாக கூறி அவரது வாழ்க்கையை சீரழித்தனர். ஆனால் என் நிஜ வாழ்க்கை அப்படி இல்லை’ என்றார் வித்யாபாலன். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் வேடத்தில் நடித்தவர் வித்யாபாலன். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. சில்க் கேரக்டரில் நடிக்க நான் தயங்கவில்லை. ஆனால் உண்மையிலேயே அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை. திரையுலகினர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பதுபோல் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Comments