அதர்வாவின் அதிரடி ஆரம்பம்...!!!

Sunday, February 12, 2012
தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவனாகவே நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் காலம் சென்ற நடிகர் முரளி. அவரது மகன் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அப்பாவை போலவே இயல்பான நடிப்பால் அனைவராலும் பாராட்டு பெற்றார். இவர் இப்போது அமலாபாலுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் ஐ.டி., ‌வேலை பார்ப்பவராக நடித்துள்ளார். தஞ்சை, பெங்களூர், சென்னை, அமெரிக்கா என்று பல ஊர்களில் இதுவரை காணாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் டைரக்டர் எல்ரெட் குமார். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்காகவே தனது உடலை ரொம்பவே மெருகேற்றி இருக்கிறார் அதர்வா. அதிலும் குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரொம்பவே ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவே வித்தியாசமாக எடுத்திருக்கிறாராம் டைரக்டர். சண்டைக்காட்சிகளில் கூட ஒரு புதிய முயற்சியாக, ஹிப் ஆப் என்று சொல்லப்படும் டான்ஸ் மூலம் சண்டைக்காட்சியை அமைத்துள்ளனராம். இதற்காகவே கிட்டத்தட்ட 3மாத பயிற்சி எடுத்தாராம் அதர்வா. நிச்சயம் இந்தபடம் தன்னுடைய கேரியரில் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் அதர்வா. முப்‌பொழுதும் உன் கற்பனைகள் வருகிற 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் எரியும் தணல் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அதர்வா.

பாலா படத்தில் நடிப்பது பற்றி கேட்டால், ஆரம்பத்தில் பாலா சார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாலே எனக்கு ஒருவித பயம் உண்டாகிவிடும். கொஞ்சம் டென்சனும் இருக்கும். அப்புறம் போக போக பழகிடுச்சு. எல்லாத்தையும் ப்ளான் பண்ணி தான் அவர் சூட்டிங்கிற்கே வருவார் என்கிறார் ரொம்பவே அடக்கமாய்.

சரி! அதர்வா அடுத்த ரவுண்டுக்கு அதிரடியாய் தயாராகிறார்...!

Comments