சிம்பு-தெலுங்கு நடிகர் திடீர் மோதல்!!!

சிம்புவுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரது படத்தில் இருந்து தெலுங்கு நடிகர் விலகினார். வெற்றிமாறன் இயக்கும் ‘வட சென்னை’ என்ற புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக தெலுங்கு நடிகர் ரானா நடிக்க ஒப்புக்கொண்டார். உடனடியாக ஷூட்டிங் தொடங்க முடிவு செய்தார் இயக்குனர். இந்நிலையில் ‘படத்தில் நடிக்க முடியாது’ என்று கூறி வெளியேறிவிட்டார் ரானா. சிம்புவும் தனது இசை ஆல்பம் பணிக்காக வெளிநாடு சென்றுவிட்டார். இதையடுத்து படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை.

படம் டிராப் ஆகிவிட்டதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதை இயக்குனர் மறுத்துள்ளார். சிம்புவுடன் ஏற்பட்ட மோதலால்தான் ரானா வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னைபற்றி வெற்றிமாறன் கூறும்போது,‘‘தன்னுடைய கேரக்டர் பிடிக்காததால் ரானா நடிக்க மறுத்துவிட்டார்’’ என்றார். ஏற்கனவே இப்படத்தில் 2வது ஹீரோவாக நடிக்க வேறு சில நடிகர்களும் மறுத்துவிட்டதால் மற்றொரு ஹீரோவை தேடிக்கொண்டிருக்கிறது படக்குழு.

Comments