தமிழில் தனுஷ் ஜோடியாக 'மயக்கம் என்ன', சிம்பு ஜோடியாக, 'ஒஸ்தி' படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். தற்போது பெங்காலி படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது: பெங்காலி படமான 'சிங்கா'வின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது தமிழில் வெளியான ‘சிறுத்தை’ படத்தின் ரீமேக். தென்னிந்திய மொழிகளில் நடித்துவிட்டு எனது தாய்மொழியில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது எனது உதவியாளர் மூலமாக தமிழ் கற்று வருகிறேன். அதாவது இந்தி வழியாக தமிழ். தெரியாத ஒரு மொழியை கற்றுக்கொள்வது சிறப்பாகவே இருக்கிறது. மொழி தெரிந்து நடிக்கும்போது இன்னும் சிறப்பாக உணரலாம். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. எனது இந்தி அறிமுகம் சுசி கணேசன் படம் மூலமாக நிறைவேறியிருக்க வேண்டும். கால்ஷீட் பிரச்னையால் அது நடக்கவில்லை. விரைவில் வேறு படம் மூலமாக அறிமுகமாவேன் என நினைக்கிறேன்.
Comments
Post a Comment