
சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்து, சாந்த குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். ஆர்ப்பாட்டமாய், ஆரவாரமாய் வெளிவரும் படங்களுக்கு மத்தியில், சமீபத்தில் புதுமுகம் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில், படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு மெளனமாய் வந்து, மாபெரும் வெற்றி பெற்ற படம் மெளன குரு. பலராலும் பாராட்டப்பட்ட இப்படம், டைரக்டர் சாந்தகுமாருக்கும், நடிகர் அருள்நிதிக்கும் ஒரு பெரிய அந்தஸ்தை பெற்று தந்துள்ளது. முன்னணி ஹீரோக்கள் பலரும் சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி அவரது படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மெளன குரு படத்திற்கு பிறகு ஒரு அருமையான கதையை சாந்தகுமார் தயார் பண்ணி இருப்பதாகவும், அந்த கதை கார்த்திக்கு ரொம்ப பிடித்து போக, அவரே நடிக்க ஆர்வம் தெரிவித்து இருப்பதாகவும், கார்த்தியும் உறவினரும், பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவே இப்படத்தை தயாரிக்க முன்வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment