
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. ஒரு பாடகராக புகழ்பெறுவேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. Ôகொல வெறிடிÕ பாடல் எனக்கு பாடகராக புகழ் பெற்று தந்தது. அது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அந்த முத்திரையை மாற்ற விரும்புகிறேன். உலகம் மிகச் சிறியது என்பதை சமீபத்தில்தான் புரிந்துகொண்டேன். இதில் ஒவ்வொரு முயற்சியையும் வெற்றியாக்க வேண்டும். என் மனைவி ஐஸ்வர்யா இயக்குனராகி இருக்கிறார். இதனால் எங்கள் உறவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திரையுலகை பற்றி அவருக்கு எடுத்து சொல்ல இதுவொரு வாய்ப்பாக அமைந்தது. இனிமேலும் சினிமா உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் ஒரு தம்பதியாகவே இருந்து ஆலோசிப்போம். என் வாழ்க்கை மிகவும் போரடித்துக்கொண்டிருந்தது. ஸ்ருதியுடன் என்னை இணைத்து கிசுகிசு எழுதுகிறார்கள். இந்த வதந்தியால் என் வாழ்க்கை பொழுதுபோக்கு நிறைந்ததாக மாறி இருக்கிறது. இப்படித்தான் அந்த வதந்தியை நான் பார்க்கிறேன். அதுபோன்ற வதந்திகள் என்னை ஒருபோதும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வேன். நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியும். என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நான் யார் என்பது தெரியும். இவ்வாறு தனுஷ் கூறினார்.
Comments
Post a Comment