மலையாள நடிகருடன் பாவனா காதலா?

சிசிஎல் கிரிக்கெட் மூலம் பிரபலமான மாடலும், நடிகருமான ராஜீவ் பிள்ளையை பாவனா காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிஎல் கிரிக்கெட்டில் இம்முறைதான் கேரள அணி அடியெடுத்து வைத்துள்ளது. மோகன்லால் தலைமையிலான இந்த அணியில் பாலா, ராஜீவ் பிள்ளை, சைஜு குருப் உட்பட நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். கேரள அணியின் பிராண்ட் அம்பாசிடர்களாக பாவனா மற்றும் லட்சுமிராய் உள்ளனர். கேரள அணி விளையாட செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று வீரர் களை மைதானத்தில் உற்சாகப்படுத்துவது இவர்களது வேலை. கேரள அணியின் கேப்டனாக மோகன்லால் இருந்தாலும் இந்த அணியிலுள்ள ராஜீவ் பிள்ளை தான் தற்போது சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

போட்டியில் இரண்டு முறை கேரளா வெற்றி பெற்றபோதும் இவர்தான் 'மேன் ஆப் தி மேட்ச்' ஆனார். சிறந்த மாடலான இவர் பல் டாக்டர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு உறவினர். சமீபத்தில் சில மலையாள படங்களில் நடித்துள்ள ராஜீவ்வை பாவனா தீவிரமாக காதலித்து வருவதாக கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது, "கிரிக்கெட் போட்டியின்போதுதான் ராஜீவ்வை எனக்கு தெரியும். அவருடன் பேசினேன், பழகினேன். உடனே அது காதல் என்றாகிவிடுமா என்ன? எனக்கு யாருடனும் காதல் இல்லை. இது தவறான தகவல்" என்றார்.

Comments