சச்சின் டெண்டுல்கருக்காக, தனுஷ் உருவாக்கியுள்ள, 'சச்சின் ஆன்தம்' என்ற ஆல்பம் யூடியூப்பில் நேற்று வெளியிடப்பட்டது. ஸ்ருதிஹாசனுடன் நடிக்கும் '3' படத்துக்காக, தனுஷ் எழுதி பாடிய, 'ஒய் திஸ் கொலவெறிடி' உலகம் முழுவதும் பரபரப்பானது. இதையடுத்து, இப்போது சச்சினுக்காக தனுஷ் ஒரு ஆல்பம் உருவாக்கியுள்ளார். 'பூஸ்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்துக்கு 'சச்சின் ஆன்தம்' என்று பெயிரிடப்பட்டுள்ளது. பாடலில், அனுஷ்கா, இசை அமைப்பாளர் அனிருத் உட்பட பலர் ஆடியுள்ளனர். ரயில்வே ஸ்டேஷனில் ஆடிப்பாடுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது நேற்று மாலை, யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சிறிது நேரத்திலேயே, பல்லாயிரக்கணக்கானோர் இதை பார்த்து ரசித்துள்ளனர். இதுபற்றி தனுஷ் கூறும்போது, "சச்சினுக்காக, சாதாரண ரசிகனின் எளிய முயற்சி இது. கண்டிப்பாக இதுவும் பேசப்படும்" என்றார்.
Comments
Post a Comment