
நடிகை அனுஷ்கா தன்னை கோலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர் சி. படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.
நடிகை அனுஷ்காவை 2 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சுந்தர்.சி. அதன் பிறகு அனுஷ்காவுக்கு தமிழில் படங்கள் இல்லாததால் டோலிவுட்டுக்கு போனார். அங்கு அருந்ததி படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து அவர் தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். அருந்ததியின் தாக்கத்தால் மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது.
அதையடுத்து இங்கும் பெரிய ஹீரோக்களுடன் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்களும், இயக்குனர்களும் அவருக்காக காத்திருக்கின்றனர். கோடி, கோடியாய் கொட்டிக் கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் அவரை தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்த இயக்குனர் சுந்தர். சி. தான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்குமாறு அனுஷ்காவை கேட்டுள்ளார்.
அதற்கு அவர் இந்த ஆண்டு முழுவதும் கால்ஷீட் புல்லாக இருக்கிறது அதனால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இந்த பதிலை சுந்தர்.சி. எதிர்பார்த்திருக்க மாட்டார் தான்.
Comments
Post a Comment