ஹலோ பிபாஷா, அது என்னுடைய கவுன்!

Thursday, February 16, 2012
ரமோனாவின் இபெல்லா கவுன்கள், பாலிவுட் கதாநாயகிகள் மத்தியில் அத்தனை பிரபலம். பிபாஷா பாசுவுக்கும் அவர்தான் டிரஸ் மேக்கராக இருக்கிறார். இந்த நிலையில் ரமோனாவை அணுகி ஜோடி பிரேக்கர்ஸ் விளம்பர நிகழ்ச்சிகளில் அணிய சில கவுன்கள் தருமாறு கேட்டுள்ளார் பிபாஷா.

வழக்கமாக ரமோனா இதுபோன்ற பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஆடைகள் கொடுப்பதில்லை. ஆனால் பிபாஷாவை தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதால் 8 லேட்டஸ்ட் டிசைன் கவுனகள் கொடுத்துள்ளார்.

பின்னர் அந்தக் கவுன்கள் பல நாட்கள் கழி்த்து தான் அவரது கைக்கு திரும்பி வந்தது. அதை கொடுக்க வந்த வந்தவர், பிபாஷா அதை அணியவேயில்லை என்று தெரிவித்துச் சென்றுள்ளார். இதனால் குழப்பமாகி விட்டது ரமோனாவுக்கு.

இந்நிலையில் தற்செயலாக ஒரு நாளிதழைப் பார்த்த ரமோனா, அதில், ஜோடி பிரேக்கர்ஸ் பட போஸ்டரில் பிபாஷாவுக்குத் தான் டிஸைன் செய்து கொடுத்த ரோஸ் நிற கவுன் அணிந்தபடி போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் கொடுத்த பச்சை நிற கவுன் ஒன்றை அணிந்து ஜீ டிவியின் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியிலும் பிபாஷா வந்ததையும் பார்த்தார்.

உடனே தான் பிபாஷாவுக்காக கொடுத்த உடைகளைத் திரும்பக் கொடுத்த வந்த நபரைப் போனில் பிடித்து பிபாஷா, தான் கொடுத்த கவுன்களைத்தான் அணிந்துள்ளார், எனவே அதற்கான பணத்தை அவர் கொடுக்க வேண்டும் என்று ரமோனா கேட்டுள்ளார். அதற்கு அந்த ஸ்டைலிஸ்ட் அநத் பச்சை கவுன் பிபாஷாவுடையது என்று தெரிவி்த்துள்ளார். இதுதொடர்பாக பிபாஷாவுக்கு போன் செய்தால் அவர் எடுக்கவே இல்லையாம்.

சரி, பச்சை தான் பிபாஷாவுடையது, அப்படியானால் மீதமுள்ள 7 கவுன்களுக்கு யார் பணம் கொடுப்பாங்க என்று தெரியவில்லை.

பொம்பளைங்க சண்டை அவங்களே எப்படியாச்சும் தீர்த்துப்பாங்க, நமக்கெதுக்கு வம்பு...!

Comments