அசின் திடீரென்று உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் நடிகை ஆகி இருக்கிறார். கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது. தமிழில் விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த அசின் திடீரென்று பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். ஆமிர்கான், சல்மான்கான் என டாப் நடிகர்களுடன் நடித்துவருகிறார். தென்னிந்திய படங்களில் கொழுக் மொழுக் நடிகைகளுக்குதான் வரவேற்பு. ஆனால் பாலிவுட்டில் ஒடிந்துவிழும் அளவுக்குள்ள ஒல்லிபிச்சான் நடிகைகளுக்குதான் மவுசு.
கரீனா கபூர், கேத்ரினா கைப், தீபிகா படுகோன் என முன்னணி ஹீரோயின்கள் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு கடைபிடித்தும், ஒரு சிலர் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு நீக்கும் ஆபரேஷன் செய்தும் மெலிந்த தேகத்தை தக்க வைத்து வருகின்றனர். பாலிவுட்டில பாப்புலர் ஆகிவரும் அசினை அங்குள்ள நிருபர்கள் சந்திக்கும்போதெல்லாம், ‘உடல் எடையை குறைக்கும் எண்ணம் உள்ளதா?’ என்று கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். அதற்கு அசின், 'ஒரு சில மாதங்கள் கழித்து என்னைப் பாருங்கள் அப்போது தெரியும்' என்றார்.
1 மாதத்துக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அசின் சமீபத்தில் மும்பையில் நடந்த நடிகை ஜெனிலியா திருமண விழாவுக்கு வந்தார். யாரோ புதுநடிகை வருகிறார் என்று பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் அவர்தான் அசின் என்று கண்டுகொண்ட புகைப்படக்காரர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பளிச் பளிச்சென கிளிக் செய்து தள்ளினர். காரணம் ஒல்லிபிச்சான் நடிகை தோற்றத்துக்கு அவர் மாறி இருந்ததுதான். கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால்தான் அவரால் ஒல்லியாக முடிந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமே மெலிந்ததாக அசின் தரப்பில் கூறப்படுகிறது.

Comments
Post a Comment