சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த பூஜா!!!

Tuesday, February 21, 2012
சின்னதிரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நட்சத்திரங்களின் பட்டியல் ஏராளாம். சந்தானம், சஞ்சீவ், கல்யாணி, சிம்ரன், ஸ்னிக்தா, லேகா வாஷிங்டன் போன்றவர்கள் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் பூஜா. எஸ்.எஸ்., மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பூஜாவுக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் சமீபத்தில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

இதுகுறித்து பூஜா நம்மிடம் பேசுகையில், நான் பல வருஷமா எஸ்.எஸ்.மியூசிக்கில் வேலை பார்த்து வருகிறேன். என்னைப்பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முன் வந்தனர். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். சினிமா என்றாலே ‌எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. பல பெரிய இயக்குநர்கள் எல்லாம் கேட்டு மறுத்துவிட்டேன். காதலில் சொதப்புவது எப்படி பட இயக்குநர் பாலாஜி மோகன் என்னிடம் வந்து கதை சொன்னதும், கதை பிடித்து போய் ஓ.கே., சொல்லிவிட்டேன். ஏனென்றால் படம் முழுக்க காமெடி சப்ஜெக்ட். படத்தின் பிற்பாதி முழுக்க என் கதை தான் வரும். மேலும் நான் சின்ன ரோல், பெரிய ரோல் என்று சொல்ல வரல, என்னுடைய கேரக்டர் பிடிச்சது, அதனால் இந்தபடத்தில் நடிச்சேன். படம் பார்த்துட்டு அங்க, இங்க கொஞ்சம் தப்பு இருக்கு என்று தோணுச்சு, அதனால் என் நடிப்பை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நடிக்கணும்னு நானே உணர்ந்தேன். மேலும் இந்த படத்துல எல்லாருமே யூத், அதனால் படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. படம் பார்த்து நிறைய பேர் பாராட்டுறாங்க. சித்தார்த்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன் என்றார்.

அப்படின்னா இனி நிறைய தமிழ் படங்களில் பூஜாவை பார்க்கலாம், ரசிக்கலாம்.

Comments