கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? - சீறும் த்ரிஷா!!!

Thursday, February 23, 2012
கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா.

வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், "நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்ப்பது தவறு.

அஜீத், பவன் கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்து உள்ளேன்.

அத்துடன் சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன்தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்திருந்தால் நல்ல படங்களை இழந்திருப்பேன்.

சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது தவறு," என்றார்.

Comments