
தமிழ் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது பிருத்விராஜ் மறுத்துவிட்டார்.
அபியும் நானும்’, ‘மொழி’, ‘சத்தம் போடாதே’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் பிருத்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகர். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘டிராபிக்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை.
இவர் கூறியதாவது:
டிராபிக்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் படமாக தயாரிக்கிறார் ராதிகா சரத். ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார். பிருத்விராஜ் தமிழ் படங்களிலும் நடித்திருப்பதால், ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக இருப்பார். அவரையே ஹீரோவாக போடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவரிடம் கால்ஷீட் கேட்டேன். பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். இதனால் வேறு ஹீரோவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு ராஜேஷ் பிள்ளை கூறினார்.
இதுபற்றி பிருத்திவிராஜ் தரப்பில் கூறும்போது,‘‘இந்தி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் 6 படங்கள் நடித்து வருகிறார். இதனால் தமிழ் படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. தமிழில் இப்படம் உள்ளிட்ட பலர் கால்ஷீட் கேட்டிருந்தனர். அதற்கு நேரம் ஒதுக்கினால் கால்ஷீட் குழப்பம் ஏற்படும் என்பதால் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்’’ என்றனர்.
Comments
Post a Comment