ரஜினி படத்துக்கு கால்ஷீட் கொடுத்ததால் தீபிகா - இந்தி தயாரிப்பாளர் கடும் மோதல்!

Tuesday, February 14, 2012
மும்பை: ரஜினி படத்துக்கு கால்ஷீட் கொடுத்ததால் தன் படத்தில் தீபிகா நடிக்க மறுத்துவிட்டதாக பாலிவுட் தயாரிப்பாளர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். ரஜினி ஜோடியாக ‘ராணா’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அப்படம் தள்ளிவைக்கப்பட்டது. உடல்நலம் தேறியதை தொடர்ந்து, ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி நடிக்கிறார். ஜோடியாக தீபிகாவே நடிக்கிறார். ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தி பட தயாரிப்பாளர் ரமேஷ் துரானி தயாரிக்கும் ‘ரேஸ் 2’ படத்தில் இருந்து தீபிகா வெளியேறினார். இதையடுத்து அவர் மீது சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். ‘நான் தயாரிக்கும் ரேஸ் 2 படத்தில் நடிப்பதாக கூறிய தீபிகா ஷூட்டிங் தொடங்கிய பிறகு நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார். அவருக்கு நடிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி இருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக நடந்துவரும் இப்பிரச்னையில் தீபிகா பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ரேஸ் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால் அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டு ஷூட்டிங் தொடங்காமல் தாமதம் செய்துவிட்டனர். இதற்கிடையில் மற்ற படங்களில் நடிக்க கொடுத்திருந்த கால்ஷீட்படி ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இதனால்தான் ரேஸ் 2 படத்தில் நடிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த் படத்துக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பே கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அவர்கள் இப்போதுதான் அறிவிக்கிறார்கள். ரேஸ் 2 பட கேரக்டர் மிகவும் அருமையானது. யார் நடித்தாலும் அவர்கள் அதிர்ஷ்டசாலிதான். சூழ்நிலையால்தான் அந்த படத்தில் நான் நடிக்க முடியவில்லை.

Comments