தயாரிப்பாளர்களுடன் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உடன்பாடு: படப்பிடிப்புகள் துவங்கின!!!

Sunday, February 26, 2012
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர் சங்கமான பெப்சிக்கும் இடையே சம்பள பிரச்சினையில் மோதல் ஏற்பட்டது. சம்பளத்தை உயத்தி தரவேண்டும் என்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதமும் நடத்தினர்.

ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் சிறு படங்களுக்கும் தனித்தனி விகிதங்களில் சம்பள உயர்வு நிர்ணயித்தனர். பெப்சி தொழிலாளர்கள் இதனை ஏற்கவில்லை. இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து அரசின் தொழிலாளர் நல ஆணையம் சமரசபேச்சு நடத்தியது.

பல தடலை பேச்சுவார்த்தைகள் நடந்தும் இழுபறி நீடித்தது. இருசங்கத்தினரும் பொதுக்குழுக்களை கூட்டி ஆலோசித்தும் முடிவு எட்டப்படவில்லை. நேற்று மாலை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இன்று காலை நடந்த சம்பள பேச்சுவார்த்தையில் நடன கலைஞர்கள் சங்கத் துக்கும் ஸ்டன்ட் யூனியன் சங்கத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இன்று மாலை மேலும் 6 சங்கங்களுடன் உடன்பாடு ஏற்பட உள்ளது. மீதி சங்கங்களுக்கு நாளை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கிறது. பெப்சி யூனியனில் மொத்தம் 21 சங்கள் உள்ளன. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்புகள் துவங்கின.

Comments