காதல் ஜோடி ஓடியதால் ஷூட்டிங் பாதிப்பு : டைரக்டர் கோபம்!

சினிமாவில் நடிக்க வந்து நிஜ காதல் ஜோடியானவர்கள் சொல்லாமல் ஓடியதால் ஷூட்டிங் நடத்த முடியவில்லை என்றார் இயக்குனர். இதுபற்றி ‘ஒரு மழை 4 சாரல்’ பட இயக்குனர் ஆனந்த் கூறியதாவது: எல்லோருக்கும் நண்பர்கள் இருந்தாலும் மனம்விட்டு பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேர்கள்தான். நல்ல நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதே கதை. மாநில கல்லுரியில் முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகியாக நான் இருந்திருக்கிறேன். கல்லூரி வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகிறது. இதில் இடம்பெறும் காதல் 75 சதவீதம் நிஜம். 25 சதவீதம் கற்பனை. ரவி, சுதர்ஷன், கணா ஹீரோக்கள். இவர்களும் முன்னாள் மாணவர்கள்தான். கேரளாவை சேர்ந்த அனகா, ரம்யா ஹீரோயின். காதல் ஜோடிகளாக சுதர்ஷன், அனகா நடித்தனர். படம் முடிவதற்குள் இருவரும் நிஜ காதலர்களாகி விட்டனர். இது பட குழுவினருக்கு தெரிந்ததும் வெட்கம் காரணமாக இருவரும் 3 நாட்கள் ஷூட்டிங் வரவில்லை. இதனால் ஷூட்டிங் பாதித்தது. இவர்கள் நடிக்கும் பாடல் காட்சி படத்தின் தொடக்கத்தில் இடம்பெற வேண்டியது. ஆனால் ஷூட்டிங் கட் அடித்ததால் பாடல் காட்சியை படமாக்குவதில் மாற்றம் செய்யவேண்டி இருந்தது. படத்தின் ஓபனிங்கில் வரவேண்டிய பாடல் இதனால் படத்தின் பிற்பாதிக்கு மாற்றப்பட்டது. இருவரும் நிஜ காதலர்களானது சந்தோஷம். ஆனால் ஷூட்டிங் வராமல் இருந்ததில் இருவர் மீதும் எனக்கு கோபம் இருக்கிறது. மொத்தம் 27 நாட்களில் ஷூட்டிங் முடிந்தது. தயாரிப்பு க.பத்ரிநாராயணன். ஒளிப்பதிவு டி.மகிபாலன். இசை ஏ.டி.மேஹன். கேரளா, கொடைக்கானல், அம்பா சமுத்திரத்திரம், சென்னை புறநகர் பகுதியில் ஷூட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு ஆனந்த் கூறினார்.

Comments