விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன்...!!!

Sunday, February 19, 2012
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். பல வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் சுந்தர்.சி, திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார். அதில் கொஞ்ச காலம் தாக்குபிடித்த அவர், இப்போது மீண்டும் டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார். தற்போது விமல், சிவா, அஞ்சலி ஆகியோரை வைத்து "மசாலா காபி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஷாலை வைத்து ஒரு முழுநீள கமர்ஷியல் படத்தை எடுக்க இருக்கிறார். படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம். விஷால் முதன்முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சுந்தர்.சி ‌கூறுகையில், இந்தபடத்திற்கு ஒரு ஹீரோயின் மட்டுமே தேர்வு செய்துள்ளோம். ஆனால் படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம், அதனால் இன்னொரு ஹீரோயினுக்காக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றார்.

இதனிடையே இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சுந்தர்.சி இயக்க திட்டமிட்டு இருப்பதாலும், ஸ்ருதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிரபலம் என்பதால் அவரை இந்தபடத்திற்கு தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Comments