'மருதநாயகத்தில் ரஜினி'; உண்மையல்ல: நிகில்!

Saturday, February 18, 2012
'மருதநாயகம்' படத்தில் ரஜினி நடிக்கப்போவதாக மும்பை பத்திரிகை வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் 1997-ல் 'மருதநாயகம்' என்ற படத்தை தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் நிதி நெருக்கடி காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இப்படம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர் வீரன் முகம்மது யூசுப் கானை பற்றிய கதை. பிரமாண்ட சரித்திர அரங்குகள், போர் வீரர்கள் உடைகள் என இதற்கு ரூ. 150 கோடி செலவாகும் என்பதாலும், அந்த அளவு பணம் செலவிட யாரும் தயாராக இல்லாததாலும் படத்தை நிறுத்தி வைத்தார் கமல். தற்போது மீண்டும் 'மருதநாயகம்' படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் இதில் ரஜினிக்குப் பொருத்தமான முக்கிய கேரக்டர் உள்ளதாகவும் கமல் மும்பையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்திருந்தார். இதனை மும்பையின் முன்னணிப் பத்திரிகையான மும்பை மிரர் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்விட் செய்திருந்தார், கமலின் பிஆர்ஓ நிகில் முருகன். அதில், "மருதநாயகம் படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் ரஜினியும் அதில் நடிப்பார் என்றும் கமல் மும்பையில் பேட்டியளித்ததாக வெளியான செய்தி உண்மையல்ல. எப்போதோ கொடுத்த பேட்டியை இப்போது புதிதாக வெளியிட்டுள்ளனர். கமல் தற்போது 'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படம் முடிந்ததும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்," என்றார். மருதநாயகத்த மறந்திடக் கூடாதுனு யாரோ பொரளிய கௌப்பிவிட்ருப்பாய்ங்க போல.....

Comments