சினிமா தியேட்டரில் அமலாபால் கண்ணீர்!!!

Saturday, February 25, 2012
சினிமா தியேட்டருக்கு சென்ற அமலாபால் கண்ணீர்விட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘மைனா’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட உணர்வு இப்போது லவ் ஃபெயிலியர் (காதல் தோல்வி) என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது ஏற்பட்டிருக்கிறது. தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சமீபத்தில் பட குழுவினருடன் சென்று படம் பார்த்தேன். படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ‘பார்வதி வி லவ் யு’ என்றார்கள். அதைக்கண்டு என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ‘லவ் ஃபெயிலியர்’ என்ற தலைப்பும், படமும் என் மனதில் இடம்பிடித்திருக்கிறது. பார்வதி என்று நான் ஏற்றிருக்கும் பாத்திரம் ஒவ்வொருவரும் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணை பார்ப்பதுபோல் உணர்வதாக கூறுகிறார்கள். தோல்வி என்ற வார்த்தை என் சினிமா வாழ்க்கையில் வெற்றி என்ற இனிப்பை கொடுத்திருக்கிறது. இவ்வாறு அமலா பால் கூறினார்.

Comments