இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை டான்ஸ் மாஸ்டர் வருத்தம்!

Friday, February 24, 2012
கமல்தான் நடனம் கற்பதில் ஆர்வம் மிகுந்தவர். இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை’ என்றார் பிரபல டான்ஸ் மாஸ்டர். ‘விஸ்வரூபம்’ படத்தை இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்துக்காக பிரபல நடன இயக்குனர் பிஜு மஹராஜ் என்பவரிடம் சமீபத்தில் கதக் நடனம் கற்றார். இதுபற்றி மஹராஜ் கூறும்போது,‘‘விஸ்வரூபம் படத்துக்காக கமல் என்னிடம் சமீபத்தில் கதக் நடன பயிற்சி பெற்றார். நான் பார்த்தவர்களில் நடனத்தை ஆர்வமாக கற்றவர் கமல். இந்த காலத்தில் பெரும்பாலான நடிகைகளுக்கு நடனம் ஆடத் தெரியவில்லை. கையையும், காலையும் அசைக்கிறார்கள் அவ்வளவுதான். சமீபத்தில் டிவி ஒன்றில் கேத்ரினா கைப் ஆடிய நடனம் பார்த்தேன். அது நடனமாக எனக்கு தெரியவில்லை. முறையான நடனம் ஆடும் அளவுக்கு அவர் தகுதியாக இல்லை. அந்த கால நடிகைகள் வஹீதா ரெஹமான் அல்லது மீனா குமாரி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது இப்போதுள்ள நடிகைகள் ஒன்றுமே இல்லை. மாதுரி தீட்சித் மட்டுமே ஓரளவுக்கு ஆடும் திறமை பெற்றவர். காட்சி முடிந்தபிறகுகூட நடன அசைவு எப்படி இருந்தது என்று ஆர்வமாக கேட்பார்’’ என்றார்.

Comments