
லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா திடீரென்று விலகிவிட்டார். லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படத்தில் மாதவனு டன் இணைந்து நடித்தார் ஆர்யா. அடுத்து லிங்குசாமி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்க உள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ ஹிட் ஆனதை தொடர்ந்து சரவணன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினர். ஆர்யாவிடம் புதுபட ஸ்கிரிப்டை சொன்னார். இதையடுத்து நடிக்க ஒப்புக்கொண் டார். ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்திலிருந்து ஆர்யா விலகி விட்டார். இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது, ‘‘இப்படத்தின் கதை எனக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் விலகி விட்டேன்’’ என்றார். அவர் விலகியதையடுத்து தெலுங்கு நடிகர் ராம் அந்த வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழியில் இப்படம் உருவாக உள்ளது.
Comments
Post a Comment