
மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜியில் தயாராகும் முதல் தமிழ்ப் படமான இதில் ஹீரோயினாக நடிக்க கேத்ரினா கைப்பிடம் சவுந்தர்யா பேசி வந்தார். அவருடைய கால்ஷீட் ஒத்துவராததால் தீபிகா படுகோனிடம் பேசினார். ரஜினியுடன் நடிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக கூறிய தீபிகா, உடனே நடிக்க சம்மதித்துள்ளார். இத்தகவலை சவுந்தர்யா தெரிவித்துள்ளார். ஏற்கனவே ‘ராணா’ படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment