தானே புயல் பாதிப்பு : நயன்தாரா ரூ.5லட்சம் நிதியுதவி! முதல்வரிடம் நேரில் வழங்கல்!!!!
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ரூ.5லட்சம் நிதியதவி வழங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. தமிழகத்தை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்ட தானே புயலால் ஏராளமான பேர் வீடுகளை இழந்து பிழைக்க கூட வழியின்றி பலர் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இதனை முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வழங்கினார். ஏற்கனவே நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment