பெங்களூரில் ரசிகர்களுடன் கொலை வெறிடி பாடலை 4 முறை பாடிய தனுஷ்!!

Tuesday, February 14, 2012
பெங்களூர்: ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் ‘ஒய் திஸ் கொலை வெறிடி’ பாடலை தனுஷ், 4 முறை பாடினார். மனைவி ஐஸ்வர்யா தயாரித்து இயக்கும் ‘3’ படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள ‘ஒய் திஸ் கொலை வெறிடி’ பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர் அனிரூத்துடன் தனுஷ் கலந்துகொண்டார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் தனுஷ் பேசினார்.

அப்போது ‘கொலை வெறிடி’ பாடலை பாடும்படி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பாடலை பாடினார் தனுஷ். தொடர்ந்து ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டதால் அதே பாடலை 3 முறை பாடினார். தனுஷுடன் சேர்ந்து ரசிகர்களும் பாடியபடி ஆட்டம் போட்டனர். பின்னர் பேசிய தனுஷ், ‘இந்த பாடலை பாடிய பாடகராக என்னை உங்களுக்கு தெரியும். என் பெயர் தனுஷ். பேசுவதற்காகத்தான் இங்கு வந்தேன். உங்கள் ஆரவாரம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். இவ்வளவு பாராட்டுக்கும் தகுதியான வகையில் நான் எதையும் சாதித்துவிடவில்லை’’ என்றார்.

Comments