Tuesday, February 14, 2012
செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. தொடக்க வீரர் விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 95 ரன் விளாசினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரின் 2வது சீசன், கடந்த மாதம் 13ம் தேதி ஷார்ஜாவில் கோலாகலமாகத் தொடங்கியது. விஷால் தலைமையிலான சென்னை ரைனோஸ் உட்பட மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.
லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் சென்னை ரைனோஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அரை இறுதி ஆட்டங்களில் சென்னை ரைனோஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணியையும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 53 ரன் வித்தியாசத்தில் மும்பை ஹீரோஸ் அணியையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின.
ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் & கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற சென்னை ரைனோஸ் கேப்டன் விஷால் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஜீவா, விக்ராந்த் களமிறங்கினர். கார்த்திக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜீவா டக் அவுட் ஆகி வெளியேற சென்னை ரைனோஸ் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
அடுத்து வந்த பாலாஜி 7 ரன்னில் வெளியேறினார். அரை இறுதியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்திய விஷ்ணு 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறியது ரைனோஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்து விக்ராந்த்துடன் பிருத்வி ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் பிருத்வி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் விக்ராந்த் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அபாரமாக விளையாடிய விக்ராந்த் அரை சதம் அடித்து அசத்தினார். விக்ராந்த் & பிருத்வி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தது. பிருத்வி 20 ரன் எடுத்து அபிமன்யு பந்துவீச்சில் சுதிர் வசம் பிடிபட்டார்.
கடைசி கட்டத்தில் ரமணா கம்பெனி கொடுக்க விக்ராந்த் சதம் விளாசுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ரமணா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சென்னை ரைனோஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. விக்ராந்த் 95 ரன் (69 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் விஷால் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா புல்டோசர்ஸ் பந்துவீச்சில் கார்த்திக், துருவா, பிரதீப், அபிமன்யு தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா புல்டோசர்ஸ் களமிறங்கியது. பாஸ்கர், ராஜிவ் இருவரும் துரத்த்தலை தொடங்கினர். அந்த அணி & ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் எடுத்து திணறியது. சென்னை ரைனோஸ் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் துடிப்புடன் செயல்பட்டு அசத்தினர்.

Comments
Post a Comment