
பின்னர் அமெரிக்கா சென்று திரைப்பட கல்வி படித்தேன். சமீபத்தில் மணிரத்னத்திடமிருந்து அழைப்பு வந்தது. பயந்தபடி சென்றேன். முதலில் பயத்தை தெளியவைத்து அவர் இயக்கும் ‘கடல்’ என்ற புதிய படத்தில் ஹீரோயின் வேடம் அளித்தார். இதற்கிடையில் தமிழ், தெலுங்கில் சொந்த படம் தயாரிக்கிறேன். தமிழ் டைட்டில் ‘மறந்தேன் மன்னித்தேன்’. ஆதி, டாப்ஸி ஜோடி. தெலுங்கில் ‘குண்டல்லு கோதாரி’ என்ற பெயரில் தயாராகிறது. குமார் நாகேந்திர இயக்கம். இதைத் தொடர்ந்து எனது சகோதரர் மனோஜ் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு இருமொழியில் ரூ. 25 கோடி செலவில் தயாரிக்கிறேன். ராஜா டைரக்ஷன்.
எனது தந்தை மோகன் பாபுவும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். ரஜினி சாரை சமீபத்தில் சந்தித்தேன். எனக்கு வாழ்த்து கூறினார். தெலுங்கில நான் நடித்த ‘அனகனகா ஓ தீருடு’ என்ற படத்தை பார்த்து பாராட்டினார். தொடர்ந்து நடிப்பு, படத் தயாரிப்பில் ஈடுபடுவேன். ஹாலிவுட் படம் தயாரிக்க வேண்டும் என்பது லட்சியம். இந்தி நடிகர் ஆமிர்கானுடன் நடிக்க மிகுந்த ஆசை. இவ்வாறு லட்சுமி மன்சூ கூறினார்.
Comments
Post a Comment