மும்பை : நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த இந்தி திரைப்படம் ‘அக்னிபாத்’ வெளியான 11வது நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. 7 நாளில் இந்த சாதனை செய்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அக்னிபாத்’ திரைப்படம் நாடு முழுவதும் 2,000 முதல் 3,000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே ரூ.25 கோடி வசூலை குவித்த அந்த படம் 11வது நாளில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய 9வது படம் இது. ஏழே நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ சாதனை செய்தது. அடுத்ததாக கஜினி (9 நாட்கள்), 3 இடியட்ஸ் (9 நாட்கள்), தபாங் (10 நாட்கள்), கோல்மால் 3 (14 நாட்கள்), ரெடி (15 நாட்கள்) என ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளன. பிரின்ட்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக சிறப்பு காட்சி கள், சினிமா தியேட்டர்களின் அளவு, அதிக கட்டணம் ஆகியவற்றால் குறைந்த நாட்களில் அதிக வசூல் கிடைப்பதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment